கடலுார்:தன் பெயரில் போலி 'இ - மெயில்' உருவாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க, கடலுார் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர சகாமுரி பெயரில், 'chandra sekhar sakhamuri IAS executivecdirector50@gmail.com' என்ற இ - மெயில் முகவரி, போலியாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து, கலெக்டர் அனுமதி பெறாமல், நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத இணையதள செய்திகள் வந்து உள்ளன.
இதையறிந்த கலெக்டர், collrcud@nic.in, cudcollector@gmail.com இரண்டு இ - மெயில் முகவரி மட்டுமே அலுவலக பணிகளுக்காக பயன்படுத்துவதால், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் இந்தஇ - மெயில் தவிர, வேறு முகவரியில் எந்த தகவல்களையும் பரிமாற வேண்டாம் என, அறிவித்துள்ளார்.கலெக்டர் பெயரில், போலியான இ - மெயில் முகவரி உருவாக்கியவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க கடலுார் புதுநகர் போலீசில், கலெக்டர் நேர்முக உதவியாளர் பரிமளம் புகார் அளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE