தமிழ்நாடு

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்...! பிறந்தது பனி விழும் மார்கழி மாதம்; துவங்கியது பக்தர் நாமசங்கீர்த்தனம்

Added : டிச 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை : மார்கழி மாதப்பிறப்பையொட்டி கோவில்களில், பகல்பத்து உற்சவமும், திருப்பாவை, திருவெம்பாவை பாராயணமும், நாமசங்கீர்த்தன நிகழ்வும் துவங்கியது.மார்கழி மாதம் நேற்று பிறந்தது. கோவையில் உள்ள கோவில்களில் அதிகாலையில், பக்தர்களின் நாமசங்கீர்த்தனம் துவங்கியது. பனிக்குளிரையும் பொருட்படுத்தாமல், பஜனைக்குழுவினர் வீதி வீதியாக, இசைக்கருவிகள் இசைத்தபடி, நாம சங்கீர்த்தனங்களை
 மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்...! பிறந்தது பனி விழும் மார்கழி மாதம்; துவங்கியது பக்தர் நாமசங்கீர்த்தனம்

கோவை : மார்கழி மாதப்பிறப்பையொட்டி கோவில்களில், பகல்பத்து உற்சவமும், திருப்பாவை, திருவெம்பாவை பாராயணமும், நாமசங்கீர்த்தன நிகழ்வும் துவங்கியது.

மார்கழி மாதம் நேற்று பிறந்தது. கோவையில் உள்ள கோவில்களில் அதிகாலையில், பக்தர்களின் நாமசங்கீர்த்தனம் துவங்கியது. பனிக்குளிரையும் பொருட்படுத்தாமல், பஜனைக்குழுவினர் வீதி வீதியாக, இசைக்கருவிகள் இசைத்தபடி, நாம சங்கீர்த்தனங்களை பாடி வலம் வந்தனர்.ராம்நகர் கோதண்டராமர் கோவிலில்...காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. திருப்பள்ளி எழுச்சியை தொடர்ந்து, திருப்பாவை திருவெம்பாவை சேவாகாலம் நடைபெற்றது.

காலை 5:30 மணிக்கு, கோவிலில் இருந்து ராம்நகர் நாமசங்கீர்த்தனை குழுவினர் பஜனை பாடல்களை பாடியபடி, காளிங்கராயன் வீதி, சென்குப்தா வீதி, ராஜாஜி வீதி, சத்தியமூர்த்தி சாலை வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தனர்.வழியெங்கும் இசைக்கருவிகளோடு நாமசங்கீர்த்தனங்களை பாட, பிக்ஷாவந்தனமும், உஞ்சவிர்த்தியும் நடைபெற்றது. நாமசங்கீர்த்தன குழுவினருக்கு மலர்களை கொடுத்தும், அரிசி, தேங்காய், பழம் வழங்கியும், வழி நெடுக உள்ள வீடுகளில் வசிக்கும் பக்தர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜெகன்நாதப்பெருமாள் கோவிலில்...

காலை, 4:00 மணிக்கு கோவில்நடைதிறப்பும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. 4:30 மணிக்கு, திருப்பாவை பாராயணம், 5:00 மணிக்கு, சித்தாபுதுார் ஜெகன்நாத பெருமாள் கோவில் பஜனை கோஷ்டியினரின், நாமசங்கீர்த்தனம் நடந்தது.லட்சுமி நாராயண வேணுகோபாலசுவாமி கோவிலில்... காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், திருப்பள்ளி எழுச்சி, திருவாராதனம், மந்திரபுஷ்பத்தை தொடர்ந்து, லட்சுமிநாராயண பஜனை கோஷ்டியினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது.

வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில்...

காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5:30 மணி, திருமஞ்சனம், திருப்பாவை பாராயணத்தை தொடர்ந்து, வாசவி கன்னிகாபரமேஸ்வரி பஜனை கோஷ்டியினரின், இசைநிகழ்ச்சி நடந்தது.ஒலம்பஸ் நரசிங்க பெருமாள் கோவிலில்...காலை 5:00 மணிக்கு திருப்பாவை பாராயணம், கோவில் பஜனைக்குழு சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது.காலை 5:30 மணிக்கு நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது.கோவையிலுள்ள வைணவ கோவில்களில், திருப்பாவை பாராயணமும், சைவ கோவில்களில் திருவெம்பாவை பாராயணமும், பகல்பத்து உற்சவமும், இசை நிகழ்ச்சிகளும்நேற்று துவங்கின.

கொரோனா காலம் என்பதால், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியோடு பக்தர்கள் பங்கேற்றனர்.கலியுகத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும், நாமசங்கீர்த்தனம் ஒன்றே தீர்வு. நாமசங்கீர்த்தனத்தை நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ எப்படி வேண்டுமானாலும், மனதில் சிந்தித்து வாயால் உரக்கச்சொல்ல வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் பலன் அளவிடற்கரியது. இதை உணர்ந்தால் மட்டுமே புரியும்; சொன்னால் தெரியாது.-பரசுராமன், செயலாளர்,ராம்நகர் பஜனைகோஷ்டி அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
17-டிச-202017:48:52 IST Report Abuse
S. Narayanan God will bless certainly to those people who are participating in the early morning event. Public should encourage them since only Hindus believe our traditional and customs. Thank you .
Rate this:
Cancel
17-டிச-202010:10:17 IST Report Abuse
நக்கல் 🙏🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X