சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கொலை வாலிபருக்கு ஆயுள்

Added : டிச 16, 2020
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே, தில்லைநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி உமாபதி, 31. இவர், இரண்டு குழந்தைகளுடன் தில்லைநாயகபுரத்தில் வசித்தார்.உமாபதியின் வீட்டிற்கு, அவரது தந்தைக்கு பழக்கமான பிரபு, 29 என்பவர் 2016 ஏப்., 29ல் வந்து, 10 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார்.உமாபதி தர மறுத்ததால், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து, தங்க செயினை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே, தில்லைநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி உமாபதி, 31. இவர், இரண்டு குழந்தைகளுடன் தில்லைநாயகபுரத்தில் வசித்தார்.

உமாபதியின் வீட்டிற்கு, அவரது தந்தைக்கு பழக்கமான பிரபு, 29 என்பவர் 2016 ஏப்., 29ல் வந்து, 10 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார்.உமாபதி தர மறுத்ததால், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து, தங்க செயினை பறித்துச் சென்றார்.கேணிக்கரை போலீசார், பிரபுவை கைது செய்தனர். வழக்கு, ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. பிரபுவுக்கு கொலை வழக்கில், ஆயுள் தண்டனையும், மற்ற இரு பிரிவு களில், 7 ஆண்டு, 10 ஆண்டு சிறை தண்டனைகளும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X