பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வேண்டுவோருக்கு வழிகாட்ட நாங்கள் தயார்!

Added : டிச 16, 2020
Share
Advertisement
ஆயிரக்கணக்கானோருக்கு வழிகாட்டுதல் மூலம் அரசு, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டி அலுவலக துணை இயக்குனர் ஜோதிமணி. அவருடன் ஒரு சந்திப்பு!வேலைவாய்ப்பு பதிவு குறித்த விழிப்புணர்வு, குறைந்து விட்டதாக தோன்றுகிறதே?இல்லை. கடந்த காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் காத்திருந்து பதிவு மேற்கொள்ள வேண்டும். தற்போது,
 வேலை வேண்டுவோருக்கு வழிகாட்ட நாங்கள் தயார்!

ஆயிரக்கணக்கானோருக்கு வழிகாட்டுதல் மூலம் அரசு, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டி அலுவலக துணை இயக்குனர் ஜோதிமணி. அவருடன் ஒரு சந்திப்பு!

வேலைவாய்ப்பு பதிவு குறித்த விழிப்புணர்வு, குறைந்து விட்டதாக தோன்றுகிறதே?

இல்லை. கடந்த காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் காத்திருந்து பதிவு மேற்கொள்ள வேண்டும். தற்போது, அனைத்தும் ஆன்லைன் என்பதால் எளிமையாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பின், வேலையிழந்தவர்களுக்கு புதிய இணையதளம் துவங்கப்பட்டதே, அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது?

www.tnprivatejobs.tn.gov.in என்ற அந்த இணையதளம் மூலம், தனியார் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு தேவைப்படுபவர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 400 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர். 700 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

* வெளிநாடு, அரசு வேலைவாய்ப்பு என பலர் பணம் கொடுத்து ஏமாறுகின்றனரே?

உண்மைதான்! விழிப்புணர்வு இன்றி பலர் பணம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்களை, மாவட்ட வேலைவாய்ப்புத்துறை வழங்குகிறது. இதுகுறித்து அறிய, வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தவர்கள், மீண்டும் புதுப்பிக்க வாய்ப்புள்ளதா? பதிவு புதுப்பிக்கவில்லை எனில், அதன் நிலைப்பாடு என்ன?

பதிவுகளை புதுப்பிக்க, அரசு பல வாய்ப்புகளை வழங்குகிறது. பட்டப்படிப்பு வரை மாவட்ட அலுவலகங்களிலும், புரபஷனல் டிகிரி பதிவுகளை சென்னை, மதுரையில் உள்ள பிரத்யேக பதிவு அலுவலகங்களிலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும். தவறுபவர்களுக்கு, ஒன்றரை ஆண்டு வரை பதிவை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்படுகிறது. தவிர, ஆண்டுதோறும், நான்கு, ஐந்து ஆண்டுகள் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு, ஒரு குறுகிய கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பதிவு செய்யாதவர்களை பரிசீலிக்க முடியாது. இவர்கள், பதிவு மூப்பை பெற இயலாது.

சிறப்பு உதவித்தொகை அல்லது வேறு திட்டங்கள் உள்ளதா?

வேலைவாய்ப்பு பதிவு செய்து ஐந்து ஆண்டுகளான பின்பும், வேலை கிடைக்காதவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தவிர, போட்டித்தேர்வுகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள், மாதிரி தேர்வுகள், மாதிரி நேர்காணல் உள்ளிட்ட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. போட்டித்தேர்வுகளுக்கு கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்புக்கு மாணவர்கள் தங்களை, எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்?

பட்டம் பெறும் பலர் மொழி, தொடர்பு மற்றும் தொழில்நுட்ப திறனில் பின்தங்கியுள்ளனர். கல்லுாரி காலம் முதலே, பாடங்களை தவிர்த்து, பிற தகுதிகளை மேம்படுத்திக்கொள்ள முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆங்கில மொழித்திறன், தொடர்பு மற்றும் தலைமைப்பண்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். www.tnsdc.gov.in, என்ற இணையதளத்தில், 1,800 திறன் சார்ந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். தவிர, போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்ட குறிப்புகளை, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X