பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி

Added : டிச 16, 2020
Share
Advertisement
சின்னசேலம்: கோமுகி அணையிலிருந்து சின்னசேலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் பணியை இணையும் கைகள் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.சின்னசேலம் நகர பகுதியில் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு, கல்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகும் மயூரா நதி மற்றும் கோமுகி அணையிலிருந்து நீர்

சின்னசேலம்: கோமுகி அணையிலிருந்து சின்னசேலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் பணியை இணையும் கைகள் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.சின்னசேலம் நகர பகுதியில் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு, கல்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகும் மயூரா நதி மற்றும் கோமுகி அணையிலிருந்து நீர் வரத்து இருந்தது.பல ஆண்டுகளாகவே தண்ணீர் வரத்து வாய்க்கால்கள் துார்ந்து, புதர் மண்டியிருந்ததால் உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.இதனையடுத்து, சின்னசேலம் இணையும் கைகள் குழுவினர் மற்றும் வெற்றி குழுவினரும் இணைந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதர் மண்டிய வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளைத் துவக்கினர்.கடந்த இரண்டு மாதங்களாக கடத்துார் வாய்க்கால், வனத்துறையில் உள்ள வாய்க்காலில் புதர்களை அகற்றுதல். மண் மேடுகளை வெட்டி எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.மேலும், கடத்துார் பிரிவு வாய்க்காலில் செல்லும் தண்ணீரைத் தடுத்து, சின்னசேலம் ஏரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் வழியில் உள்ள ஏரிகள் தற்போது முழுதுமாக நிரம்பி வருகின்றன. அடுத்து வரும் நாட்களில் சின்னசேலம் ஏரியும் முழுதுமாக நிரம்பி பாசன வசதி பெரும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X