பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப் பொருளானதுமகளிர் சுகாதார வளாகம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
கச்சிராயபாளையம்: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் காட்சிப் பொருளாக உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் 17வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் 1.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணிகள்

கச்சிராயபாளையம்: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் காட்சிப் பொருளாக உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் 17வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் 1.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.பணிகள் முடிந்தும் இன்னும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால், இப்பகுதி பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.சுகாதார வளாகம் திறக்கப்படாததால், சுற்றுப்புற பகுதிகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. அருகில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, பூட்டிக் கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X