பரமக்குடி : பரமக்குடி நகராட்சியில்அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் திறந்து கிடக்கும் நிலையில் ஆபத்தை விளைவிக்கும் முன் சீர் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் உள்ள தெருக்களில் ஆழ்குழாய் கிணறுகள் போடப்பட்டுள்ளன. குழாய்களுக்கு அருகில் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அடிகுழாய் பலவும் பயனின்றி துருப்பிடித்து உடைந்து வருகிறது.இவற்றில் சில குழாய்கள் தரையுடன் உடைந்துள்ளன.
100 அடி தொடங்கி 300 அடி வரை அமைக்கப்பட்ட குழாய்களின் அருகில்செல்லும் குழந்தைகள் இக்குழிகளில் விழும் அபாயம் உள்ளது. மேலும் உடைந்த குழாய்களால் எந்த பயனும் இன்றி மீண்டும் பொதுமக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்படுகிறது.இதே போல் வைகை ஆற்றின் படித்துறைகள் மற்றும் ஆற்றின் உள் பகுதிகளில் குடிநீர் தேவைக்காக 12 இன்ஞ் வரை ஆழ்குழாய் அமைக்கப்பட்டது. இவையும் ஆங்காங்கே சில இடங்களில் மூடப்படாமல் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE