கால்நடைகளை ரோட்டில் திரியவிடும் வளர்ப்போர்

Added : டிச 16, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் மக்கள் கால்நடைகளை ரோட்டில் கண்டபடி திரியவிடுவதால்வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இவற்றை தடுக்க நகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் சில மாதங்களாக கட்டவிழ்த்து விடப்படும் மாடுகள் ரோடுகளில் கண்டபடி சுற்றித்திரிகின்றன. பல இடங்களில் ரோட்டின் நடுவே படுத்து விடுகின்றன.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் மக்கள் கால்நடைகளை ரோட்டில் கண்டபடி திரியவிடுவதால்வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இவற்றை தடுக்க நகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் சில மாதங்களாக கட்டவிழ்த்து விடப்படும் மாடுகள் ரோடுகளில் கண்டபடி சுற்றித்திரிகின்றன. பல இடங்களில் ரோட்டின் நடுவே படுத்து விடுகின்றன. கூட்டமாக திரியும் மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு இருசக்கர வாகன ஓட்டிகளை முட்டித்தள்ளுகின்றன.வாகன ஓட்டிகள் விழுந்து விபத்திற்குள்ளாகின்றன.

சுற்றித்திரியும் மாடுகளால் ராமநாதபுரம் சாலைத் தெரு, அரண்மனை, புது பஸ்ஸ்டாண்ட் ரோடு, அரசு மருத்துவமனை சாலை, கேணிக்கரை சந்திப்பு உள்ளிட்ட போக்குவரத்து உள்ள இடங்களில் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மாடுகளை வீடுகளில் கட்டி வளர்க்காமல் அவற்றை வளர்ப்போர் இப்படி ரோடுகளில் திரிய விடுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் பல மாதங்களாக இதனை வேடிக்கை பார்க்கிறது. இவற்றை வளர்ப்போருக்கு அபராதம் விதிக்கலாம். அல்லது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். இதில் எதையும் செய்யாமல் மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X