சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொதுச் செயலாளர் பிறந்த நாள்

Added : டிச 16, 2020
Share
Advertisement
விழுப்புரம்: அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ., பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் நகரில் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் கே.கே., ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கி, 100 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து, விழுப்புரம் மந்தக்கரை

விழுப்புரம்: அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ., பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் நகரில் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் கே.கே., ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கி, 100 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து, விழுப்புரம் மந்தக்கரை திடலில், 200 பேருக்கு புடவை, அன்னதானம் மற்றும் விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் ஏழை மக்களுக்கு 3 வேளை உணவையும், மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், மாநில அமைப்பு செயலாளர் கணபதி, மாவட்ட துணை செயலாளர் பார்த்திபன், விழுப்புரம் நகர செயலாளர் சக்தி வேல்முருகன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் அய்யனார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆனந்த் சீனிவாசன், மாணவரணி இணை செயலாளர் பூபதி, வார்டு செயலாளர் தங்கம், துணை செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X