விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், 2021-22ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா குழுக்கூட்டம் நடைபெற்றது.கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, 2021-22ம் ஆண்டிற்காக தயாரித்த வளம் சார்ந்த வங்கி கடன் திட்டம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) 2021-22ம் ஆண்டிற்கான, விழுப்புரம் மாவட்டத்தின் வளம் சார்ந்த வங்கி கடன் 6,105.49 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த 2020-21ம் ஆண்டிற்கான கடன் திட்டத்தை காட்டிலும் 12.74 சதவீதம் கூடுதலாகும்.விழுப்புரம் மாவட்டம் 2022ம் ஆண்டிற்குள் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்கும் கொள்கையை மனதில் கொண்டு இந்த வளம் சார்ந்த வங்கி கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் விவசாயத்திற்கான வங்கி கடன் 4,864.30 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 2959.08 கோடி ரூபாய் விவசாய குறுகிய கால கடனும், 1,213.94 கோடி ரூபாய் விவசாய நீண்ட கால கடனாகும். சிறு, குறு தொழில்களுக்கு 337.89 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி கடன் பிரிவில் 200.70 கோடி ரூபாய் மற்றும் கல்வி கடன் பிரிவில் 205.67 கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.இந்த கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரிகரசுதன், நபார்டு வங்கியின் மாவட்ட உதவி பொது மேலாளர் ரவிசங்கர், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பெரியசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE