சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் முன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.டிச.,14ல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை, இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து முல்லை தீவு கடற்படை முகாமில் கொரோனா கண்டறிய தனிமையில் அடைத்துள்ளனர். இம்மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க கோரி

ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் முன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டிச.,14ல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை, இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து முல்லை தீவு கடற்படை முகாமில் கொரோனா கண்டறிய தனிமையில் அடைத்துள்ளனர். இம்மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க கோரி நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், வேலைநிறுத்தம் செய்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர்அலுவலகம் முன் 29 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் மற்றும் கைதான மீனவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X