பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பின்றி வீடூர் அணை பூங்கா சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
மயிலம்; வீடூர் அணை பூங்கா பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் மிக முக்கியமான சுற்றுலா பகுதியாக வீடூர் அணை உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் சங்கராபரணி தொண்டி ஆற்றின் குறுக்கே வீடூர் அணை கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த புயல் மழையால் அணையின்

மயிலம்; வீடூர் அணை பூங்கா பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் மிக முக்கியமான சுற்றுலா பகுதியாக வீடூர் அணை உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் சங்கராபரணி தொண்டி ஆற்றின் குறுக்கே வீடூர் அணை கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த புயல் மழையால் அணையின் முழுக் கொள்ளளவான 32 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. இது பார்ப்பதற்கு கடல் போன்று ரம்மியமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் பலரும் அணையை சுற்றிப்பார்க்க வருகின்றனர்.இந்த அணையில் உள்ள பூங்காவின் நுழைவுப் பகுதியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்துச் செல்கின்றனர். செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு அதில் நடராஜர் சிலை வைத்துள்ளனர்.இந்த செயற்கை நீரூற்று இயங்காததால் நீரின்றி சிமென்ட் குளம் வறண்டு காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.அதிகாரிகள் இங்கு தேங்கியுள்ள மழை நீரை அகற்றி நடராஜர் சிலை உள்ள பகுதியை சீரமைத்து செயற்கை நீரூற்று மீண்டும் செயல்பட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X