புதுச்சேரி: கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள், மார்ச் இறுதியில் மூடப்பட்டன. தற்போது, கொரோனா தொற்று குறைந்திருப்பதாலும், பள்ளிகளை திறக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளதாலும், கல்வி நிறுவனங்களை திறக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஒன்பதாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன.இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி, 4ல் திறக்கப்படும். காலை, 10:00 மணியில் இருந்து மதியம், 1:00 மணி வரை செயல்படும். ஜனவரி, 18ல் இருந்து பள்ளிகள் முழு நேரம் இயங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE