பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி கமிட்டியில் மழையில் நனைந்த நெல்

Added : டிச 16, 2020
Share
Advertisement
செஞ்சி; செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று மழையில் நெல் மூட்டைகள் நனைந்ததால் நெல்லின் விலை குறைந்தது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்யாமல் திரும்ப எடுத்து சென்றனர். தமிழகத்தில் உள்ள மார்ககெட் கமிட்டியில் அதிகம் நெல் விற்பனைக்கு வரும் கமிட்டியாக செஞ்சி கமிட்டி உள்ளது. இங்கு சீசன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்

செஞ்சி; செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று மழையில் நெல் மூட்டைகள் நனைந்ததால் நெல்லின் விலை குறைந்தது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்யாமல் திரும்ப எடுத்து சென்றனர். தமிழகத்தில் உள்ள மார்ககெட் கமிட்டியில் அதிகம் நெல் விற்பனைக்கு வரும் கமிட்டியாக செஞ்சி கமிட்டி உள்ளது. இங்கு சீசன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் வரும்.இந்த ஆண்டு சம்பா சீசன் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. நேற்று இந்த மார்க்கெட் கமிட்டிக்கு 241 விவசாயிகளின் 4 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில் 3 ஆயிரம் மூட்டைகளை குடோன்களுக்கு உள்ளேயும், ஆயிரம் நெல் மூட்டைகளை வாகனங்கள் மற்றும் பொது மக்கள் நடந்து செல்லும் திறந்த வெளியிலும் ஏலத்திற்கு வைத்தனர். வெளியில் வைத்த ஆயிரம் நெல் மூட்டைகளும் காலையில் இருந்து பெய்த மழையில் நனைந்தன.இதனால் நெல்லின் தரம் குறைந்தது. வியாபாரிகள் இதற்கு விலை கொடுக்க முடியாது என தெரிவித்தனர். அதிகாரிகள், வியாபாரிகளை சமாதானம் செய்து விலை போட வைத்தனர். இதில் குடோன்களில் 2,200 ரூபாய்வரை விலை போன பொன்னி நெல், வெளியே மழையில் நனைந்ததால் 1,189க்கு விலை போனது. 1,100 வரை விலை போன டீலக்ஸ் நெல் 800 க்கு விலை போனது. இதனால் விரக்தியடைந்த சொரத்துார் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி 68; தனது 15 மூட்டை நெல்லையும், நீலாம்பூண்டியை சேர்ந்த மக்புல் 68: என்ற விவசாயி தனது 9 மூட்டையையும், ஈச்சூரை சேர்ந்த கிருஷ்ணசாமி, 70; தனது 11 மூட்டை நெல்லையும் விற்பனை செய்யாமல் திரும்ப கொண்டு சென்றனர். வயதான இந்த விவசாயிகள் மழையில் நேற்று பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவும், கடும் மன உலைச்சலும் ஏற்பட்டது. செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் புதிதாக ரூ.15 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான குடோன் கட்டி உள்ளனர். இதில் இடம் இருந்தும் நேற்று விவசாயிகளின் நெல்மூட்டைகளை திறந்த வெளியில் இறக்கி வைத்து ஏலம் நடத்தியதால் விவசாயிகளின் நெல்லுக்கு விலை குறைந்து போனது.அடுத்து வரும் நாட்களில் மேலும் நெல் மூட்டைகள் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் பாதிக்காத வகையில் ஏலம் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் எடுக்க வேண்டும்.நெஞ்சை உருக்கிய பதில்நெல்லை திரும்ப எடுத்து சென்ற 70 வயது விவசாயி கிருஷ்ணசாமி கூறியதாவது. நெல் விற்று வரும் பணத்தில் வீடு கட்டவோ, நகை வாங்கவோ போவதில்லை. எப்போதும் நாங்கள் ரேஷன் அரிசியை தான் சாப்பிடுகிறோம். இந்த பணத்தில் ரேஷனில் பருப்பு, எண்ணை வாங்கவும், அத்தியாவசிய மருத்துவ செலவுக்குமே இது பத்தாது. நெல்லை எடுத்து சென்று காயவைத்து விற்பனை செய்தால் மேலும் 3 ஆயிரம் வரை விலை கிடைக்கும். அதனால் திரும்ப கொண்டு செல்கிறேன் என உருக்கமாக சொன்னார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X