பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி கடைகள் திறப்பதில் இழுபறி தயாரான கட்டடம் ஒப்படைக்கப்படுமா?

Added : டிச 16, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள வாடகை கடைகளை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.3 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில், புதியதாக தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கட்டப்பட்டு வரும் மற்றும் கட்டப்படவுள்ள 78 கடைகளுக்கு முன் ஏலம் (பிரீ ஆக்ஷன்) மற்றும் முன் ஒப்பந்த

விழுப்புரம்; விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள வாடகை கடைகளை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.3 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில், புதியதாக தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கட்டப்பட்டு வரும் மற்றும் கட்டப்படவுள்ள 78 கடைகளுக்கு முன் ஏலம் (பிரீ ஆக்ஷன்) மற்றும் முன் ஒப்பந்த அறிவிப்பு, நகராட்சி நிர்வாகம் சார்பில், வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, கடந்த அக்.29ம் தேதி ஏலம் நடைபெற்றது. புதியதாக ஏலம் விடப்படுகின்ற கடைகளுக்கு டெபாசிட் தொகையாக, ஒரு கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்ட பட்டுள்ளது. மேலும், ஏலம் எடுத்த கடைகளுக்கான ஒரு ஆண்டு வாடகை தொகையை முன்கூட்டியே செலுத்திடவும், அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பழைய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 25 கடைகள் ஏலம் விடப்பட்டு, வாடகைக்கு விடுவதற்கு தயார் நிலையில் உள்ளன. இந்த கடைகளில், மின் சப்ளை, டைல்ஸ் பதித்தல் உள்ளிட்ட சில பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளது. இறுதி கட்டப்பணிகளை முடித்து, குத்தகைதாரர்களிடம் ஒப்படைப்பதில், இழுபறி நிலவுகிறது. புதிய கட்டடம் கட்டி தயார் நிலையில் உள்ள 25 கடைகளுக்கு, மாத வாடகையாக ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், தலா ஒரு கடைக்கு குறைந்தபட்சமாக ரூ. 5,600 துவங்கி, அதிகபட்சமாக ரூ.30 ஆயிரத்து 100 வரை ஏலம் முடிவு செய்யப்பட்டது. இத்துடன் ஜி.எஸ்.டி., தொகை தனியாக செலுத்தப்பட வேண்டும்.வாடகை கடைகளை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதால், நகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.3 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த கடைகளை ஒப்படைப்பதில் நிலவுகின்ற இழுபறியை முடிவுக்கு கொண்டு வர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X