ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை பகுதி கீழக்கரை ரோட்டில் ஓடைவாய்க்கால் பராமரிக்கப்படாமல் பாழாகியுள்ளதால் மழை பெய்யும்போது கரட்டுப்பகுதியில்தேங்கி தண்ணீர் வீணாகிறது.
ராமநாதபுரத்தில் மழை பெய்யும் போது தண்ணீர்வீணாகாத வகையில் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் தேங்கும் மழைநீர் கண்மாய், ஊரணிகளுக்கு செல்லும் வகையில் ஓடைவாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இவை சரிவர பராமரிக்கப்படாமல் தரைப்பாலத்தில் மதகு சேதமடைந்தும், முட்செடிகள்,கொடிகள் வளர்ந்து பாழாகியுள்ளன.
குறிப்பாக ராமநாதபுரம்- கீழக்கரை ரோடு ஆர்.எஸ்.மடை பகுதியில் ரோட்டின் இருபுறத்திலும் உள்ள ஓடை வாய்க்கால் பராமரிக்கப்படாமல் நீர்வழித்தடங்களில் முட்செடிகள், புதர்மண்டி கிடக்கிறது.இதனால் கரட்டுபகுதியில் தண்ணீர் குளம்போல தேங்கியுள்ளன. மேலும் கனமழை பெய்யும்போது ஓடைவாய்க்காலில் செல்லமுடியாமல் வயல்வெளியில் தண்ணீர் தேங்குவதாகவிவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ----------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE