சிங்கம்புணரி : சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சீரழிக்கும் விதமாக சமூக விரோதிகள் அதை திறந்தவெளி 'பார்' ஆக மாற்றிவிட்டதால் போலீசாரே முகம் சுளிக்கின்றனர்.
இப்பள்ளி வளாகம் மற்றும் மைதானத்தில் இரவு 7:00 மணி முதல் நள்ளிரவு வரை 'குடிமகன்'களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. அங்கு கும்பலாக அமர்ந்து மது அருந்தும் பலர் காலி பாட்டில்களை உடைத்து வகுப்பறை, வட்டார வளமைய அலுவலகம் மற்றும் மைதானம் முழுவதும் வீசிச்செல்கின்றனர். இந்த மைதானத்தில் தான் தினமும் காலை, மாலை வேளைகளில் போலீசார் உள்ளிட்ட பலர் நடை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
சப்-டிவிசனுக்குட்பட்ட அனைத்து போலீசாருக்கும் இந்த மைதானத்தில் தான் வாரந்தோறும் கவாத்து மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது.குடிமகன்கள் வீசிச்செல்லும் காலிபாட்டில்கள் மற்றும் குப்பைகளை பார்த்து உடற்பயிற்சிக்கு வரும் மகளிர் போலீசார் முகம் சுளிக்கின்றனர். இக்கும்பல் மீது இது வரை யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இந்த மைதானத்தில் உள்ள கல்வி அலுவலகத்துக்கு வரும் ஊழியர்களும், ஆசிரியர்களும் புலம்புகின்றனர். எனவே பள்ளி வளாகம் மற்றும் மைதானத்தில் மது அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE