பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகராட்சியில் ரூ.1.20 கோடி பணி: டெண்டர் திடீர் ரத்து

Added : டிச 17, 2020
Share
Advertisement
விழுப்புரம் நகராட்சியில், நாளை நடைபெற இருந்த ரூ.1.20 கோடி மதிப்பிலான டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் இரண்டு வணிக வளாகம் மற்றும் 38 கடைகள் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தது. மொத்தம் ரூ. ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான 7 தொகுப்புகளாக நாளை (18 ம் தேதி) டெண்டர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கான

விழுப்புரம் நகராட்சியில், நாளை நடைபெற இருந்த ரூ.1.20 கோடி மதிப்பிலான டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் இரண்டு வணிக வளாகம் மற்றும் 38 கடைகள் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தது. மொத்தம் ரூ. ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான 7 தொகுப்புகளாக நாளை (18 ம் தேதி) டெண்டர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கான டெண்டர், ஆப்-லைன் முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, அரசு விதிமுறைப்படி, ரூ.10 லட்சத்திற்கு மேலான ஒப்பந்தப் பணிகள் அனைத்தும், ஆன்-லைன் மூலம் டெண்டர் கோரப்பட வேண்டும். மேலும், நகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு முறைப்படி தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.மேற்கண்ட அனைத்து பணிகளும், ரூ.10 லட்சத்திற்கு கூடுதலாக தனித்தனி பணிகள் என்பதால், ஆப்-லைன் முறையில் ஒப்பந்தப் பணிகளை டெண்டர் விடுவதை ரத்து செய்ய வேண்டும் என, நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அகமது, கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஒப்பந்த பணி டெண்டர் குறித்து நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி கூறுகையில், விழுப்புரம் நகராட்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் இரண்டு வணிக வளாகம் மற்றும் 38 கடைகள் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தது. இந்த டெண்டர் நாளை (18 ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால், டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. வேறு ஒரு தேதியில் டெண்டர் நடைபெறும் என தெரிவித்தார்

-நமது சிறப்பு நிருபர்-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X