புதுச்சேரி: அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
கடந்த 1971-இல் நடந்த இந்தோ- பாகிஸ்தான் போர் வெற்றியின் 49-வது ஆண்டு விழா, புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் 15-வது ஆண்டு விழா கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு சின்னம் அருகே நடந்தது.லீக் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்தோ -பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தையொட்டி போரில் வீரமரணமடைந்தவர்கள் நினைவாக அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் ராணுவ வீரர்கள் கார்கில் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.விழாவில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த முன்னாள் ராணுவ வீரர்கள் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.மேலும் வில்லியனுார் லீக் சார்பில் நடந்த ராணுவ, காவல் துறையில் சேர விரும்புவோர்களுக்கான உடல் தகுதி பயிற்சி முடித்த 7 பெண்கள் உள்பட 23 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE