புதுச்சேரி: ஆன்லைன் மூலம் நடந்த மாநில அளவிலான கலா உட்சவ் போட்டிகளில் அமலோற்பவம் மற்றும் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டுவரும் வகையில் கலா உட்சவ் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆன்-லைனில் நடத்தப்பட்டது.அதில், புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்கத்தின் சமகர சிக் ஷா சார்பில் நடனம், இசைக்கருவி மீட்டல் மற்றும் ஓவியம் உள்பட 9 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.இதில் முதலிடம் பிடித்தமாணவர்களின் தனித்திறன்களைக் காணொலிக் காட்சியாகப் பதிவு செய்து, மாநில அளவிலான போட்டிக்கு மொத்தம் 63 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மாநில அளவிலான போட்டி,பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரராசு தலைமையில் நடந்தது.இதில்18 பேர் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.வெற்றிபெற்ற 18 பேரில் புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மற்றும் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 13 பேர் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.குரல் இசை (செம்மொழி) போட்டியில் புதுச்சேரி தர்மாபுரி எஸ்.ஆர்.எம்., வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர் சாமிநாதன், கிளாசிக்கல் நடனத்தில் பேட்ரிக் பள்ளி மாணவர் சூர்யகிரண் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE