புதுச்சேரி: காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 2020-2021ம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு சேர்வதற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு வரும் 29ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விருப்பம் உள்ளவர்கள் www.navodaya.gov.in என்ற இணை தளத்தை பார்வையிட்டு இலவசமாக விண்ணப்பிக்கலாம்.அதேபோல் ஒன்பதாம் வகுப்பில் உள்ள காலி இடங்களில் சேர்வதற்கான தேர்விற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு வரும் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.vavodaya.gov.in மற்றும் www.nvsadmission classix.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE