கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விருதுகள் வழங்க கோரி வழக்கு முதல்வர் பதிலளிக்க உத்தரவு

Added : டிச 17, 2020
Share
Advertisement
சென்னை:செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில், விருதுகளை தொடர்ந்து வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவுக்கு, முதல்வர் உள்ளிட்டோர் பதிலளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனு:மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, 2004ல், தமிழ் மொழிக்கு செம்மொழி

சென்னை:செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில், விருதுகளை தொடர்ந்து வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவுக்கு, முதல்வர் உள்ளிட்டோர் பதிலளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனு:மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, 2004ல், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. சென்னையில், 2008ல், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் துவங்கப்பட்டது.அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி, அந்நிறுவனத்திற்கு தன் சொந்த பணத்தில் இருந்து, 1 கோடி ரூபாய் வழங்கினார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக, தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர்கள் விருது, 2010 வரை வழங்கப் பட்டன.தற்போது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து விருதுகளையும், கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள், சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, முதல்வர், செம்மொழி தமிழாய்வு இயக்குனர், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை செயலருக்கு உத்தரவிட்டனர். விசாரணையை, மார்ச், 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X