பஸ் மோதி வாலிபர் பலிநகரி: சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த, கரகம்பாடி அருகே, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சாலையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, பின்னால் வந்த ஆர்.டி.சி., பஸ், வாலிபர் மீது மோதியது. இதில், வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த வாலிபரின் பெயர், விலாசம் தெரியவில்லை.பச்சை கலர் பேண்ட், சிமென்ட் கலர் அரை கை சட்டை அணிந்திருந்தார். ரேணிகுண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.6 டூ - வீலர்கள் பறிமுதல்நகரி: சித்துார் மாவட்டம், சத்தியவேடு டவுன் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார் வந்தது.இதையடுத்து, சத்தியவேடு டவுன் பி.சி.மற்றும் எஸ்.சி.காலனி ஆகிய பகுதிகளில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, ஆறு டூ - வீலருக்கு, உரிய ஆவணங்கள் இல்லாததை கண்டறிந்த போலீசார், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.கஞ்சா கடத்தியவர் கைதுநகரி: சித்துார் மாவட்டம், வரதய்யபாளையம் பகுதியில், பத்தலவல்லம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, அவ்வழியாக வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை, போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.இருசக்கர வாகனத்தில், வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய், 32, என்பவரிடம், 20 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் விஜய்யை கைது செய்து விசாரிக்கின்றனர்.மின்சாரம் பாய்ந்து சிறுமி பலிநகரி: சித்துார் மாவட்டம், குப்பம் டவுன் குல்லேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் வைஷ்ணவி, 6. இவர், நேற்று முன்தினம், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டு சுவரின் அருகே சென்ற மின்சார ஓயரை, வைஷ்ணவி தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.தொட்டியில் விழுந்து சிறுவன் பலிநகரி: சித்துார் மாவட்டம், காளஹஸ்தி அடுத்த, வாதிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பைய்யா மகன் பவன்குமார், 2. இந்த சிறுவன், நேற்று முன்தினம், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பவன்குமார் இறந்தார். காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பஸ் மோதி வாலிபர் உயிரிழப்புநகரி: சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த, கரகம்பாடி அருகே, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சாலையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, பின்னால் வந்த ஆர்.டி.சி., பஸ், வாலிபர் மீது மோதியது. இதில், வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த வாலிபரின் பெயர், விலாசம் தெரியவில்லை. பச்சை கலர் பேன்ட், சிமென்ட் கலர் அரை கை சட்டை அணிந்திருந்தார். ரேணிகுண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.மின்சாரம் பாய்ந்து சிறுமி பலிநகரி: சித்துார் மாவட்டம், குப்பம் டவுன் குல்லேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் வைஷ்ணவி, 6. இவர், நேற்று முன்தினம், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டு சுவரின் அருகே சென்ற மின்சார ஒயரை, வைஷ்ணவி தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.தொட்டியில் விழுந்து சிறுவன் இறப்புநகரி: சித்துார் மாவட்டம், காளஹஸ்தி அடுத்த, வாதிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பைய்யா மகன் பவன்குமார், 2. இந்த சிறுவன், நேற்று முன்தினம், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பவன்குமார் இறந்தார். காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மயங்கி விழுந்த முதியவர் மரணம்கனகம்மாசத்திரம்: திருத்தணி அடுத்த, நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் சந்திரசேகர், 62. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்க சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். இதில், சம்பவ இடத்திலேயே சந்திரசேகர் இறந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE