சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதுார் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ

Added : டிச 17, 2020
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, கார்களுக்கு, 'சீட்' தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் கருகின.ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துாரில், கார்களுக்கு சீட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.நேற்று காலை, இந்த ஆலையில், திடீரென தீ

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, கார்களுக்கு, 'சீட்' தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் கருகின.ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துாரில், கார்களுக்கு சீட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.நேற்று காலை, இந்த ஆலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள், உடனடியாக, அங்கிருந்து வெளியேறி தப்பினர்.தீ விபத்து குறித்து அறிந்த, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைக்க முயன்றனர்.தீயை கட்டுப்படுத்த முடியாததால், தொழிற்சாலையின் உற்பத்தி நிலையம், குடோன் பகுதியில் பரவி, கொழுந்து விட்டு எரிந்தது.இதையடுத்து, இருங்காட்டுகோட்டை தீயணைப்பு வாகனம் மற்றும் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற் சாலையின் தீயணைப்பு வாகனம் என, ஆறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, நுரை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, ஐந்து மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள், தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என, ஸ்ரீபெரும்புதுார் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X