சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர் உடலை மீட்டு தர உறவினர்கள் போராட்டம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
காசிமேடு: கடலில் மாயமான மீனவர் இறந்த நிலையில், அவரது உடலை மீட்டு தரக்கோரி, உறவினர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, கவிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், ஓட்டுனர் தனசேகர் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு, 7ம் தேதி, மீன்பிடிக்க சென்றனர்.திரும்பி வரும் போது, திருவான்மியூர் கடல் பகுதியில், காசிமேடைச்

காசிமேடு: கடலில் மாயமான மீனவர் இறந்த நிலையில், அவரது உடலை மீட்டு தரக்கோரி, உறவினர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, கவிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், ஓட்டுனர் தனசேகர் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு, 7ம் தேதி, மீன்பிடிக்க சென்றனர்.திரும்பி வரும் போது, திருவான்மியூர் கடல் பகுதியில், காசிமேடைச் சேர்ந்த மீனவர் முருகன், 43, மாயமானார். அவரை தேடக்கோரி, உறவினர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர்.ஆனால், அதிகாரிகள் தேடும் பணியில் மெத்தனம் காட்டியதால், மீனவர் கடலில் மூழ்கி இறந்த நிலையில், அவரது உடல், மூன்று நாட்களாக, கடலுார், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மிதந்து கொண்டிருந்ததாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.ஆழ்கடலில் மாயமான மீனவர் முருகன், கடலில் மூழ்கி இறந்தாரா; நாகப்பட்டினம் கடல் பகுதியில் மிதந்தது அவர் உடல் தானா.அப்படியானால், உடலை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதிப்பது ஏன் எனக்கேட்டு, உறவினர்கள், நேற்று காலை, காசிமேடு மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மீனவர் உடலை, உடனடியாக மீட்டு தரக் கோரி, கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, நாகபட்டினம், கல்லாறு மீனவ கிராமத்தில், மீனவர் உடல் கரை ஒதுங்கியதாக வந்த தகவலையடுத்து, உறவினர்கள் முற்றுகையை கைவிட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X