பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களால் மட்டுமே சுத்தமாகும் உத்தண்டி

Added : டிச 17, 2020
Share
Advertisement
சென்னை: சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உள்ள, 199வது வார்டில், பெண் துாய்மை பணியாளர்கள் மட்டும் பணியமர்த்தப்பட்டு, 'சக்தி' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், அடையாறு, கோடம்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், 'உர்பசர் சுமித்' நிறுவனம், குப்பை கையாளும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் மற்றும்
 பெண்களால் மட்டுமே சுத்தமாகும் உத்தண்டி

சென்னை: சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உள்ள, 199வது வார்டில், பெண் துாய்மை பணியாளர்கள் மட்டும் பணியமர்த்தப்பட்டு, 'சக்தி' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், அடையாறு, கோடம்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், 'உர்பசர் சுமித்' நிறுவனம், குப்பை கையாளும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமூகத்தில் தனியாக வாழும் பெண்கள் மற்றும் பெண்களால் வழிநடத்தப்படும் குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, உத்தண்டியில், குப்பை கையாளும் பணிக்கு, 40 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, 'சக்தி' என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசன் கூறியதாவது:சமுதாயத்தில் பல்வேறு இன்னல்களில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 'சக்தி' அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வாயிலாக, ஒரு வார்டில், குப்பை வாகனத்தின் ஓட்டுனர் முதல், குப்பை சேகரிப்பவர், பிரிப்பவர், அந்த பணியாளர்களை மேற்பார்வை செய்பவர் என, அனைவரும் பெண் ஊழியர்களாக தான் இருப்பர். இதனால், பெண்களின் பல்வேறு இன்னல்களை, மேற்பார்வையாளராக உள்ள பெண் புரிந்து, அவர்களுக்கு உதவ முடியும். இதேபோன்று, மற்ற வார்டுகளிலும் படிப்படியாக, சக்தி அமைப்பு விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X