சென்னை: 'ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, விலை ஏற்றம் செய்ய வேண்டும்' என, சென்னை மாவட்ட மெழுகுவர்த்தி தயாரிப்பாளர் நலச் சங்கம், முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.சென்னை மாவட்ட மெழுகுவர்த்தி தயாரிப்பாளர் நலச்சங்கத்தினர், முதல்வருக்கு அனுப்பிய மனு:தமிழகத்தில், பல ஆயிரம் குடும்பங்கள், மெழுகுவர்த்தி தயாரிக்கும் குடிசை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மூலப் பொருளான மெழுகு, சென்னை, மணலியில் உள்ள, பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.இதை, சிட்கோ மற்றும் என்.எஸ்.ஐ.சி., நிறுவனங்களிடம் இருந்து, நாங்கள் பெற்று தொழில் செய்கிறோம்.மெழுகின் விலையை, அடிக்கடி உயர்த்தி, தற்போது, 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்திவிட்டனர். மழை மற்றும் பண்டிகை உள்ளிட்ட காலங்களில், நாங்கள் விலை ஏற்றினால், பொதுமக்கள் புகார் கூறுவர்.எனவே, தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில், வருங்காலத்தில், தடையின்றி மெழுகு வழங்கவும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு விலை ஏற்றம் செய்யவும், மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE