சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதுாரில் முகமூடி கொள்ளை கும்பல்

Added : டிச 17, 2020
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: சென்னை பல்கலை உதவி பதிவாளர் வசிக்கும், ஸ்ரீபெரும்புதுார் பகுதி வீட்டில், 40 சவரன் நகைகளை, முகமூடி அணிந்த மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 56; சென்னை பல்கலை உதவி பதிவாளர். இவர், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிச்சிவாக்கம் ஊராட்சி, பட்டுமுடையார்குப்பம் கிராமத்தில், தன் சொகுசு பங்களாவில்,
 ஸ்ரீபெரும்புதுாரில் முகமூடி கொள்ளை கும்பல்

ஸ்ரீபெரும்புதுார்: சென்னை பல்கலை உதவி பதிவாளர் வசிக்கும், ஸ்ரீபெரும்புதுார் பகுதி வீட்டில், 40 சவரன் நகைகளை, முகமூடி அணிந்த மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 56; சென்னை பல்கலை உதவி பதிவாளர். இவர், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிச்சிவாக்கம் ஊராட்சி, பட்டுமுடையார்குப்பம் கிராமத்தில், தன் சொகுசு பங்களாவில், மனைவி சுகுணா, 48, உடன் வசிக்கிறார். இவரது ஒரே மகன், கனடா நாட்டில், விமான பொறியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆறு பேர், சண்முகம் வீட்டின் மதில் சுவரை தாண்டி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர்.வீட்டில், துாங்கிக் கொண்டிருந்த சண்முகத்தை தாக்கி, அவரது மனைவி சுகுணாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களது மொபைல் போன்களை பிடுங்கினர். பின், ஒரே அறையில், இருவரையும் தள்ளி பூட்டினர்.தொடர்ந்து, வீட்டில் இருந்த, 40 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து தப்பிச் சென்றனர். சண்முகம், அறையின் கதவை உடைத்து வெளியே வந்து, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.வீட்டுக்கு சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார், தடயங்களை சேகரித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'வீட்டில், 'சிசிடிவி' கேமராக்கள் மற்றும் நாய்கள் இல்லாததை அறிந்து, மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனினும், சேகரித்த தடயங்களை வைத்து, கொள்ளையர்களை பிடிப்போம்' என்றனர்.ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் காவல் எல்லையில், அடுத்தடுத்து நடக்கும் கொள்ளை சம்பவங்களால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஒரே பாணியில் கொள்ளை!ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்துாரில், கடந்த மாதம், மருத்துவர் ஜோஸ் அனிஸ்டா என்பவரது வீட்டில், மாடிக்கு செல்லும் குழாய் வழியே ஏறி, அதிகாலையில் வீட்டினுள் புகுந்த முகமூடி அணிந்த ஆறு மர்ம நபர்கள், 14 சவரன் நகைகளை கொள்ளையடித்து, மொபைல் போனை பறித்து சென்றனர்.

இதே பாணியில், பிச்சிவாக்கம் சண்முகம் வீட்டில், நேற்று கொள்ளை நடந்ததால், இந்த இரு கொள்ளையிலும் ஈடுபட்டது, ஒரே கும்பலாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.கடந்த வாரம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கத்தில், ஆட்டோவில் சென்ற நகை கடை உரிமையாளர் மகனிடம், கத்தியை காட்டி மிரட்டி, 300 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது, முகமூடி அணிந்த ஆறு பேர் கும்பல் தான். இதே பகுதியில், அக்டோபரில், அன்பு என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X