சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு இருவருக்கு ஏழாண்டு சிறை

Added : டிச 17, 2020
Share
Advertisement
தேனி:அரசு பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில் தேனி மாவட்டம் போடி சங்கராபுரம் ராஜா 32, பூபதி 21, ஆகியோருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.உத்தமபாளையத்தில் இருந்து போடிக்கு 2012 ஜன.18ல் செல்வம் 32, அரசு பஸ் ஓட்டி சென்றார். சங்கராபுரம் கருப்பசாமி கோயில் பஸ் ஸ்டாண்டில் நின்ற பஸ்சில் விரைவாக ஏறும்படி கூறியதால் வைரம், ராஜா, பூபதி ஆகியோர் டிரைவர், கண்டக்டரிடம்

தேனி:அரசு பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில் தேனி மாவட்டம் போடி சங்கராபுரம் ராஜா 32, பூபதி 21, ஆகியோருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உத்தமபாளையத்தில் இருந்து போடிக்கு 2012 ஜன.18ல் செல்வம் 32, அரசு பஸ் ஓட்டி சென்றார். சங்கராபுரம் கருப்பசாமி கோயில் பஸ் ஸ்டாண்டில் நின்ற பஸ்சில் விரைவாக ஏறும்படி கூறியதால் வைரம், ராஜா, பூபதி ஆகியோர் டிரைவர், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டு கற்களால் பஸ் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

போடி தாலுகா போலீசார் ராஜாவை கைது செய்தனர். பூபதி, வைரம் முன்ஜாமின் பெற்றனர். உடல்நலக்குறைவால் வைரம் உயிரிழந்தார்.தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. ராஜா, பூபதிக்கு தலா ஏழு ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜி.விஜயா தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X