ராமநாதபுரம்:செலவுக்கு பணம் தராத உமாபதியை 31, கழுத்தை அறுத்து கொலை செய்த
பிரபு 29,க்கு ராமநாதபுரம்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
ராமநாதபுரம் அருகே தில்லைநாயகபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். ராணுவத்தில் பணியாற்றுகிறார். மனைவி உமாபதி. 2 குழந்தைகள் உள்ளனர். உமாபதியின் வீட்டிற்கு அவரது தந்தைக்கு பழக்கமான தேவிப்பட்டினம் அருகே சிறுகுடி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் பிரபு, 2016 ஏப்.29ல் வந்துள்ளார். அவர் உமாபதியிடம் செலவிற்கு ரூ.10 ஆயிரம் கேட்டு தர மறுத்தஉமாபதியை கழுத்து அறுத்து கொன்று செயினை பறித்தார்.
கேணிக்கரை போலீசார் பிரபுவை கைது செய்தனர்.இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.பிரபுவுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும்,
மற்ற 2 பிரிவுகளில் 7 ஆண்டு, 10 ஆண்டு தண்டனைகளும், ரூ.3000 அபராதமும் விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE