தேனி:நஷ்டத்தை தவிர்க்க கூட்டுறவு மண்ணெண்ணெய் பங்குகளை பெட்ரோல் பங்குகளாக மாற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு மாதந்தோறும் ஒதுக்கீடு செய்யப்படும் மண்ணெண்ணெய் கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த லாபத்திற்கு விற்கப்படுகிறது. இதற்காக மாவட்டங்களில் மண்ணெண்ணெய் பங்குகள் துவங்கப்பட்டன.
மாநிலத்தில் தற்போது மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்துள்ள நிலையில் மத்திய அரசும் 34 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. இதனால் 10,000 லி.,மண்ணெண்ணெய் விற்ற பங்குகளில் தற்போது 2000 லிட்டர் விற்கின்றன. லிட்டர் ரூ.14.90க்கு வாங்கி, ரேஷன் கார்டுகளுக்கு ரூ.15.60க்கு விற்கப்படுகிறது. ஊழியர் சம்பளம், மின் கட்டணம், வாடகை என ஆண்டுக்கு ரூ.பல லட்சம் சங்கங்களுக்கு நஷ்டமாகின்றன.
இதனால் மண்ணெண்ணெய் பங்குகளை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூட்டுறவு சங்க பதிவாளர் அனுமதித்துள்ளார். முக்கிய இடங்களில் உள்ள மண்ணெண்ணெய் பங்குகளை ஆயில் கார்ப்பரேஷன்கள் மூலம் பெட்ரோல், டீசல் பங்குகளாக மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்மூலம் மாதம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும். அங்கு மண்ணெண்ணெய் பெற்ற ரேஷன் கார்டுகளை, ரேஷன் கடைகளில் இணைக்க உத்தரவிடப் பட்டு உள்ளது.தேனி கூட்டுறவு மொத்த விற்பனை சங்கம் தேனி, கூடலுாரில் நடத்திய மண்ணெண்ணெய் பங்குகள் பெட்ரோல் பங்குகளாக மாற்றப்பட உள்ளன. மாநில முழுவதும் இதுபோல நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE