பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கூடுதல் பொறுப்பில் கல்வி அதிகாரிகள்: தத்தளிக்கும் கல்வித்துறை

Added : டிச 17, 2020
Share
Advertisement
சிவகங்கை:தமிழக கல்வித்துறையில் உதவி திட்ட அலுவலர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், சி.இ.ஓ., பி.ஏ., பணியிடங்கள் பல ஆண்டாக காலியாக இருப்பதால் கல்வித்துறை தத்தளித்து வருகிறது.தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் சர்வ சிக் ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.,), ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷா அபியான் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் உள்ளது. இதன் கீழ் தொடக்க முதல் மேல்நிலை பள்ளிகள் வரை

சிவகங்கை:தமிழக கல்வித்துறையில் உதவி திட்ட அலுவலர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், சி.இ.ஓ., பி.ஏ., பணியிடங்கள் பல ஆண்டாக காலியாக இருப்பதால் கல்வித்துறை தத்தளித்து வருகிறது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் சர்வ சிக் ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.,), ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷா அபியான் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் உள்ளது. இதன் கீழ் தொடக்க முதல் மேல்நிலை பள்ளிகள் வரை மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி, பள்ளி வகுப்பறை கட்டடம், ஆசிரியர் பயிற்சி அளித்தல், மாற்றுத்திறன் குழந்தைக்கு நலத்திட்டம் என ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய, மாநில அரசு நிதியில் செய்து வருகின்றனர்.

இத்திட்டங்கள் முறையாக மாணவர்களை சென்றடைவதை கண்காணிக்க முதலில் தனியாக முதன்மை கல்வி அலுவலர்களை நியமித்தனர். திடீரென அதை மாற்றி ஒரே முதன்மை கல்வி அலுவலரே இத்திட்டங்களை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கீழ் எஸ்.எஸ்.ஏ.,வில் உதவி திட்ட அலுவலர், ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளனர். நிரந்தர கல்வி அதிகாரி தேவைஇப்பணியிடத்திற்கு தலைமை ஆசிரியர் அந்தஸ்தில் நிரந்தர அலுவலரை நியமிக்காமல், அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களையே கூடுதல் பொறுப்பாக கவனிக்க வலியுறுத்துகின்றனர்.

இது போன்று மாநில அளவில் 16 மாவட்டங்களில் 13 உதவி திட்ட அலுவலர், 12 மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிகளை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். இதனால், பள்ளி வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. தமிழக அளவில் 9 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் தலைமை ஆசிரியர்களே, பி.ஏ., பதவியையும் கூடுதலாக கவனிக்கின்றனர். எனவே உதவி திட்ட அலுவலர், திட்ட ஒருங்கிணைப்பாளர், பி.ஏ., பதவிக்கு நிரந்தரமாக அலுவலர்களை நியமிக்க வேண்டும்.


தலைமை ஆசிரியர் வாய்ப்பு

அரசு உயர், மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோ கூறியதாவது, கூடுதல் பொறுப்புகளுக்கு பதில் நிரந்தரமாக அலுவலர்களை நியமித்தால், காலியாகும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப வாய்ப்பு கிடைக்கும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X