மதுரை:திண்டுக்கல் மாவட்டம் வி.புதுக்கோட்டை ஊராட்சித் தலைவர் கருப்புசாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஊராட்சிக்கான நிதியை அரசு குறைத்து விட்டது. மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இயலாமல் சிரமப்படுகின்றன. ஊராட்சிகளுக்கு வரி வருவாய் குறைவு. நிதி ஆதாரம் இன்றி ஊராட்சி நிர்வாகத்தை நடத்த இயலாது.
ஊராட்சிகளுக்கு பாரபட்சமின்றி சமமாக போதிய நிதி ஒதுக்கக்கோரி தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளர், மாநில நிதிக் கமிஷன், திண்டுக்கல் கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு அரசுத் தரப்பில் விபரம் பெற்று நாளை (டிச.,18) தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE