பொது செய்தி

இந்தியா

முஸ்லிம் பல்கலை விழா பிரதமர் மோடி பங்கேற்பு

Added : டிச 17, 2020
Share
Advertisement
அலிகார்:உத்தர பிரதேசத்தின் அலிகாரில் டிச., 22ம் தேதி நடைபெறும் முஸ்லிம் பல்கலை. நுாற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள அலிகாரில் செயல்பட்டு வந்த முகமது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லுாரி 1920ம் ஆண்டு டிச. 1ல் அலிகார் முஸ்லிம் பல்கலை.யாக மாறியது.பல்கலை நுாற்றாண்டு விழா

அலிகார்:உத்தர பிரதேசத்தின் அலிகாரில் டிச., 22ம் தேதி நடைபெறும் முஸ்லிம் பல்கலை. நுாற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள அலிகாரில் செயல்பட்டு வந்த முகமது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லுாரி 1920ம் ஆண்டு டிச. 1ல் அலிகார் முஸ்லிம் பல்கலை.யாக மாறியது.பல்கலை நுாற்றாண்டு விழா டிச. 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இருவரும் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து பல்கலை துணை வேந்தர் தாரிக் மன்சூர் கூறும்போது ''இந்த விழாவில் பங்கேற்க சம்மதித்த பிரதமருக்கு நன்றி. இந்த விழா பல்கலையின் வளர்ச்சிக்கும் இங்கிருந்து செல்லும் மாணவர்கள் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் அதிகம் பங்கேற்கவும் உதவும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X