நியூயார்க்:ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் சீனாவுக்கான தன் பிரதிநிதியாக இந்தியாவைச் சேர்ந்த சித்தார்த் சட்டர்ஜியை நியமித்துள்ளார்.
ஐ.நா.வில் பணியாற்றும் சித்தார்த் சட்டர்ஜி தேசிய ராணுவ அகாடமியில் பயின்று அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலை.யில் பொது கொள்கையில் முதுகலை பட்டம் பெற்றவர்.இவர் தற்போது ஆப்ரிக்க நாடான கென்யாவிற்கு ஐ.நா. பிரதிநிதியாக உள்ளார். கென்யாவில் ஐ.நா. வளர்ச்சி திட்டம் தேசிய மக்கள் தொகை நிதியம் ஆகியவற்றின் தலைமை பொறுப்புகளை வகித்துள்ளார்.
அத்துடன் இந்தோனேஷியா சோமாலியா சூடான் நாடுகளுக்கான ஐ.நா. குழந்தைகள் நிதியத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் முதன்மை துாதராக செயல்பட்டுள்ள சித்தார்த் சட்டர்ஜி 1997ல் ஐ.நா.வில் இணைவதற்கு முன் இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.இவர் 2021 ஜனவரியில் சீனாவில் ஐ.நா.வின் பிரதிநிதியாக பொறுப்பேற்க உள்ளார். சீனாவின் ஒப்புதலுடன் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE