அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் 'டுவிட்'

Added : டிச 17, 2020
Share
Advertisement
மதுரை எய்ம்ஸ் அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என ஆர்.டி.ஐ., அம்பலப்படுத்திஇருக்கிறது. 5 ஆண்டுகள் இடைவெளி ஏன், பேரம் நடக்கிறதா, இதுதான் முதல்வர் பழனிசாமியின் நிர்வாகத் திறமையா, தேர்தல் நேரத்தில் மீண்டும் ஒரு நாடகத்திற்கான ஏற்பாடா, மத்திய- மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்திடுக.ஸ்டாலின், தி.மு.க., தலைவர் இந்திய அளவில் அதிக கடன் வாங்கி குவித்த பட்டியலில்

மதுரை எய்ம்ஸ் அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என ஆர்.டி.ஐ., அம்பலப்படுத்திஇருக்கிறது. 5 ஆண்டுகள் இடைவெளி ஏன், பேரம் நடக்கிறதா, இதுதான் முதல்வர்
பழனிசாமியின் நிர்வாகத் திறமையா, தேர்தல் நேரத்தில் மீண்டும் ஒரு நாடகத்திற்கான
ஏற்பாடா, மத்திய- மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்திடுக.

ஸ்டாலின், தி.மு.க., தலைவர்

இந்திய அளவில் அதிக கடன் வாங்கி குவித்த பட்டியலில் தமிழகம் 2வது இடம். தமிழக அரசின் கடன்: 2011ம் ஆண்டு ரூ.1,01,439 கோடி. 2020 --21,ல் ரூ. 4,56,660 கோடி. ஓவ்வொரு தமிழனின் மீதும் ரூ.29,000 வரை கடன். இது தான் வளர்ச்சியா.

கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர்

வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில், நமது தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும்.

முருகன், தமிழக பா.ஜ., தலைவர்

ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை 'ஒரே பிரதமர்'. எங்கெல்லாம் 'ஒரே' வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் 'ஒரே' என்று சொல்வதே பெரும் அநீதி.

கமல், ம.நீ.ம., தலைவர்

ஒரே மாதத்தில் காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு இரண்டு முறை உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. சிலிண்டர் விலை உயர்வை, மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

விஜயகாந்த், தே.மு.தி.க., நிறுவனர்

இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும்,
படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசன், த.மா.கா., தலைவர்

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., நிறுவனங்களின் ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு கொள்கையை
நடைமுறைபடுத்த வேண்டாம் என அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமூகநீதியை ஒழித்துக்கட்டும் இந்தப் பரிந்துரையை அரசு
ஏற்கக்கூடாது.

திருமாவளவன், வி.சி.க, தலைவர்

சிலிண்டர் விலையை அடுத்தடுத்து உயர்த்தி வருவது ஏற்புடையதல்ல. 15 நாட்களில் ஒரு சிலிண்டருக்கு ரூ.100 உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என
வலியுறுத்துகிறேன்.

தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்

மக்களின் நலன் கருதி, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை குறைக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கே கொண்டு வர வேண்டும்.

வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்

சமூக நீதிக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்ற பா.ஜ.,வின் திட்டத்தை செயல்படுத்தும்
நோக்கில் மத்திய கல்வி அமைச்சகத்தின் குழு இட ஒதுக்கீட்டு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்ற பரிந்துரையை செய்துள்ளது. இப்போது ஆசிரியர் நியமனத்தில் நாளை மாணவர்கள் சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜ., முனையும் என்பதில்
சந்தேகமில்லை.

ஜவாஹிருல்லா, ம.ம.க., தலைவர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X