சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மதுக்கடையில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Added : டிச 17, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், 'எலைட்' டாஸ்மாக் மதுக்கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர், காமராஜ் ரோட்டில், 'எலைட் டாஸ்மாக்' மதுக்கடை (எண்: 4000) செயல்படுகிறது. இங்கு லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு,10:30 மணிக்கு சோதனை மேற்கொண்டனர்.கடை

திருப்பூர்:திருப்பூரில், 'எலைட்' டாஸ்மாக் மதுக்கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர், காமராஜ் ரோட்டில், 'எலைட் டாஸ்மாக்' மதுக்கடை (எண்: 4000) செயல்படுகிறது. இங்கு லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு,10:30 மணிக்கு சோதனை மேற்கொண்டனர்.கடை விற்பனையாளர்கள் தர்மன், பெரியசாமி, சூப்பர்வைசர்கள் மாணிக்கம், லாசர் மற்றும் உதவி விற்பனையாளர் கோவிந்தன் ஆகியோரிடம் இருந்து, கணக்கில் வராத, 50 ஆயிரத்து, 520 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இரவு, 10:00 மணிக்கு துவங்கிய, சோதனை நள்ளிரவு, 2:00 மணி வரை நீடித்தது. இந்த கடைக்கு சம்பந்தம் இல்லாமல், செல்லம் நகர் 'டாஸ்மாக்' மதுக்கடை சூப்பர்வைசர் லாசர் இங்கு இருந்தார். கடந்த மே மாதம், செல்லம் நகர் கடையில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தபோது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சரக்கு மாயமானது தெரிந்தது. அவர் மீது விசாரணை இருக்கும் நிலையில், மீண்டும் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X