இந்திய நிகழ்வுகள்
பக்தர்களுக்கு ஆபாச வீடியே அனுப்பிய ஊழியர்கள் பணிநீக்கம்
திருப்பதி: பக்தர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக, ஆபாச வீடியோ இணைப்பு அனுப்பிய, திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் மேலும் ஐந்து பேர், அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்த மான, ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி என்ற, தொலைக் காட்சியில், தினசரி காலையில், பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்து கூறும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாழ்த்துகள் கூற விரும்பும் பக்தர்கள், தங்கள் விபரங்களை தேவஸ்தான தொலைக்காட்சிக்கு மின்னஞ்சல், அஞ்சல் அட்டை வாயிலாக அனுப்புவது வழக்கம்.அவர்களுக்கு பிரசாதம்,அட்சதை உள்ளிட்டவற்றை, தேவஸ்தானம் அனுப்பி வருகிறது.
இதுபோன்ற ஒரு பக்தருக்கு பிரசாதம் அனுப்பும் போது, தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் ஒருவர், ஆபாச வீடியோ, 'லிங்க்' எனப்படும், இணைப்பு ஒன்றை அனுப்பினார். அதிர்ச்சியடைந்த பக்தர், இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் அளிக்க, தேவஸ்தானமும் கண்காணிப்புத்துறை மூலம் விசாரணையை துவக்கியது.அதில், பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததால், இதில் நேரடியாக தொடர்புடைய ஐந்து பேர், பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழக நிகழ்வுகள்
பந்தலுார் : பந்தலுார் அருகே, சேரம்பாடி கண்ணம்வயல் பகுதியில், மூன்று பேரை கொன்ற ஒற்றை கொம்பன் யானையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
'ஆன்லைன்' வகுப்புக்கு பயந்து, வீட்டை விட்டு வெளியே வந்த இரு சிறுவர்கள், திருத்தணியில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் முகமூடி கொள்ளை கும்பல்
ஸ்ரீபெரும்புதுார்: சென்னை பல்கலை உதவி பதிவாளர் வசிக்கும், ஸ்ரீபெரும்புதுார் பகுதி வீட்டில், 40 சவரன் நகைகளை, முகமூடி அணிந்த மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
சென்னை: சென்னையில், வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில், கல்லுாரி மாணவர்கள் இருவர், பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரவாயல்: கர்நாடக மாநிலத்தில் இருந்து, 'டிரான்ஸ்பார்மர்' ஏற்றி வந்த கனரக லாரி, மதுரவாயல் மேம்பாலத்தில் சிக்கி, ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.

சென்னை:'டிவி' நடிகை சித்ராவின், மொபைல் போனில் பதிவாகியிருந்த, 'ஆடியோ' பதிவு அழிக்கப்பட்ட தகவல், விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, 'டிவி' நடிகை சித்ரா, பூந்தமல்லி அருகே, நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கெண்டார். உடன் தங்கி இருந்த, சந்தேக பேர்வழியான, அவரது கணவர் ஹேம்நாத், 32 என்பவரை, நசரத்பேட்டை போலீசார் கைது செய்து, பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, கார்களுக்கு, 'சீட்' தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் கருகின.
உலக நிகழ்வுகள்
28 பேர் சுட்டுக் கொலை
நியாமே: மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த, நிகர் நாட்டில், போகா ஹரம் பயங்கரவாத அமைப்பினர், டூமுர் கிராமத்தில் புகுந்து, சந்தையை தீ வைத்து எரித்தனர். வீடுகளை இடித்துத் தள்ளி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், குண்டு பாய்ந்து, 28 பேர் பலியாயினர். இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து, மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படுவதாக, நைஜர் அரசு அறிவித்துள்ளது.
330 மாணவர்கள் கடத்தல்
லாகோஸ்: மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த நைஜீரியாவில், கட்சினா நகருக்குள் புகுந்த, போகோ ஹரம் பயங்கரவாதிகள், துப்பாக்கி முனையில், அரசு பள்ளி மாணவர்கள், 330 பேரை கடத்திச் சென்றனர். இதற்கு, ''அப்பள்ளியில், இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான, மேற்கத்திய பாடங்கள் கற்பிக்கப்பட்டதுதான் காரணம்,'' என, போகோ ஹரம் தலைவர் அபுபக்கர் ஷெகாவு தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டில் ரூ 11 லட்சம் இழந்த சிறுவன்
வாஷிங்டன்: அமெரிக்காவில், 'ஆப்பிள் ஐபாட்' வாயிலாக, 'ஆன்லைன் கேம்' விளையாடிய, 6 வயது சிறுவன், 11 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளான்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE