கிளப்புறாங்கய்யா... உலகம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
குட்டியுடன் சுற்றும் திமிங்கலம்அமெரிக்காவின், தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் என்ற தீவுப்பகுதியில், 50 அடி நீளம், 50 டன் எடை கொண்ட திமிங்கலம் ஒன்று சுற்றி திரிந்தது. இதையறிந்த ஆய்வாளர்கள் ட்ரோன் கேமராவில் படம் பிடித்தபோது, அது வட அட்லாண்டிக் ரைட் திமிங்கலம் என்பதும், மிகவும் அரிதான வகையை சேர்ந்ததும் என தெரியவந்தது. மேலும், அந்த திமிங்கலம், 15 அடி நீளமுள்ள

குட்டியுடன் சுற்றும் திமிங்கலம்

அமெரிக்காவின், தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் என்ற தீவுப்பகுதியில், 50 அடி நீளம், 50 டன் எடை கொண்ட திமிங்கலம் ஒன்று சுற்றி திரிந்தது. இதையறிந்த ஆய்வாளர்கள் ட்ரோன் கேமராவில் படம் பிடித்தபோது, அது வட அட்லாண்டிக் ரைட் திமிங்கலம் என்பதும், மிகவும் அரிதான வகையை சேர்ந்ததும் என தெரியவந்தது. மேலும், அந்த திமிங்கலம், 15 அடி நீளமுள்ள குட்டியுடன் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது, இதுதொடர்பான காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

முதலை அருகே விழுந்த பந்து

அமெரிக்காவின், புளோரிடாவில் உள்ள கேப் கோரல் என்ற இடத்தில் இருவர் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அடிக்கப்பட்ட பந்து குளக்கரையில் படுத்திருந்த முதலையின் வால் பகுதியில் விழுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கெயல் டாவன்ஸ் என்ற இளைஞர், பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு பொறுமையாக முதலையின் அருகில் சென்றார். அதன்பின், முதலைக்கே தெரியாமல் லாவகமாக பந்தை எடுத்தார். மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாறைக்குள் வசிக்கும் இளைஞர்

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ரேன்டி,35. இவர் பெற்றோர் உயிரிழந்த பிறகு திடீரென காணாமல் போனார். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பல இடங்களில் அவரை தேடிவந்தனர். இந்நிலையில், பெற்றோரை பறிகொடுத்த விரக்தியில், பிறருடன் பேச விருப்பமின்றி அங்குள்ள ஒரு பாறைக்கு அடியில் பதுங்கி வாழ்ந்து வந்துள்ளார். இதையறிந்த ஊர்மக்கள் அவரை கண்டுபிடித்து உணவளித்து உதவினர். பொது இடத்தில் வாழ வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தும், அதை ஏற்க மறுத்து ரேன்டி அங்கேயே வசித்து வருகிறார். இதுதொடர்பான காட்சி வலைதளங்களில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய் - பூனை நட்பு

அமெரிக்காவின், கான்சாஸ் பகுதியில் வசிக்கும் சமந்தா மூர் என்பவர் தன் வீட்டில், மூன்று வயதான பிட்புல் நாயையும், மூன்று கால்கள் மட்டுமே கொண்ட பூனைக்குட்டியையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில், லுானா எனப்படும் நாயும், மார்ஸ் என பெயரிடப்பட்ட பூனையும் நட்பாக பழகுகின்றன. ஒன்றாக விளையாடுவது, சாப்பிடுவது துாங்குவது என பாசத்தோடு பழகி வருகின்றன. நாய், பூனையின் இந்த பாசப்பிணைப்பு வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X