திருப்பூர்:வேதாரண்யத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் ஜவுளி பூங்காவில் தொழில் துவங்க வருமாறு, திருப்பூர் தொழில் துறையினருக்கு, அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், ஜவுளி தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் மணியன் பேசியதாவது:வேதாரண்யத்தில், 114 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, ஜவுளி தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் பூங்காவுக்கு, திட்ட அறிக்கை தயாரித்து, அரசு ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுஉள்ளது.
திருப்பூர் போன்ற நகரங்கள், தொழிலாளர் பற்றாக்குறையை சந்திக்கின்றன; பல மாவட்ட மக்கள் வேலை தேடி வெளியே செல்கின்றனர். பனியன் தொழில் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்கும் வகையில், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில், தொழில் துவங்க, திருப்பூர் ஆயத்த ஆடை துறையினர் முன்வர வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் மணியன் பேசினார்.கைத்தறித்துறை முதன்மை செயலர் சம்பு கல்லோலிகர், இயக்குனர் கருணாகரன், நாகை கலெக்டர் பிரவீன் நாயர், திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE