பொது செய்தி

தமிழ்நாடு

தேசப்பற்றுடன் பணியாற்றுங்கள் இளம் வீரர்களுக்கு அறிவுரை

Added : டிச 17, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்ற, 60 இளம் வீரர்களுக்கான, சத்திய பிரமாண நிகழ்ச்சி நடந்தது.ராணுவ வீரர்கள், உப்பு உட்கொண்டு, தேசிய கொடி, பகவத் கீதை, பைபிள், குரான் மீது சத்திய பிரமாணம் செய்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய, ஐந்து வீரர்களுக்கு தங்க மெடல் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.துணை கமாண்டன்ட் கர்னல் நாயக்

குன்னுார்:குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்ற, 60 இளம் வீரர்களுக்கான, சத்திய பிரமாண நிகழ்ச்சி நடந்தது.

ராணுவ வீரர்கள், உப்பு உட்கொண்டு, தேசிய கொடி, பகவத் கீதை, பைபிள், குரான் மீது சத்திய பிரமாணம் செய்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய, ஐந்து வீரர்களுக்கு தங்க மெடல் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

துணை கமாண்டன்ட் கர்னல் நாயக் பேசுகையில்,''வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 'கோவிட்' நேரத்தில் கடினமான பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள். 1971ல், டிச., 3 முதல் டிச., 16 வரை, மிக குறுகிய காலத்தில் நடந்த இந்தியா - - பாக்., போரில், பாக்., ராணுவ தளபதி சரணடைந்தார். இந்த வெற்றியை குறிக்கும், 'விஜய் திவஸ்' நினைவு துவக்க நாளில், சத்திய பிரமாணம் எடுத்துள்ளீர்கள். நீங்கள் தேசப்பற்றுடன் சிறப்பாக பணியாற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X