புதுச்சேரி:புதுச்சேரியில், ஜனவரி, 4ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் பேட்டி:
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள், மார்ச் இறுதியில் மூடப்பட்டன. தற்போது, கொரோனா தொற்று குறைந்திருப்பதாலும், பள்ளிகளை திறக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளதாலும், கல்வி நிறுவனங்களை திறக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 9ம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜனவரி, 4ல் திறக்கப்படும். காலை, 10:00 மணியில் இருந்து மதியம், 1:00 மணி வரை செயல்படும். ஜனவரி, 18ல் இருந்து பள்ளிகள் முழு நேரம் இயங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.புதுச்சேரியில் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரிகள் இன்று திறக்கப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE