திருப்பூர்:பத்திரப்பதிவு துறையில், ரசீது முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப் பட்டு உள்ள விசாரணை குழுவில், சம்பந்தப்பட்ட அலுவலகத்தை சேர்ந்த அதிகாரியும் இடம் பெற்றுள்ளார். எனவே, விசாரணை குழுவினரை மாற்றி அமைக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில், ஜாயின்ட் - 1 மற்றும் 2 அலுவலகங்கள் உட்பட, ஆறு சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவுத்துறையில், 'ஆன்லைன்' ரசீது முறைகேடு வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இதுதொடர்பாக, உதவியாளர்கள் சங்கர், பன்னீர்செல்வம் மற்றும் பணியில் கவனக் குறைவாக இருந்தாக ஜாயின்ட் -1, இணை சார்-பதிவாளர் விஜயசாந்தி, ஜாயின்ட் - 2 இணை சார்-பதிவாளர் முத்துக்கண்ணன், இளநிலை உதவியாளர் மோனிஷா ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இந்த 'மெகா' முறைகேடு தொடர்பாக விசாரிக்க, பதிவுத்துறையின் கூடுதல் ஐ.ஜி., நல்லசிவன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.பத்திரப்பதிவு துறை வட்டாரத்தினர் கூறிய தாவது:ரசீது முறைகேடுக்கு முக்கிய காரணமாக உள்ள,உதவியாளர்கள் சங்கர், பன்னீர்செல்வம் ஆகியோர் களப்பணி ஆவணங்களுக்கு செலுத்திய தொகையை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள 'வி.பி., ஆன்லைன் டைப் ஆபீஸ்' என்ற கடையில், ஜெய்சங்கர் என்பவருடன் சேர்ந்து, அரசு தொகை கையாடல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள, ஏ.ஐ.ஜி., ராமசாமி மீதும் அதிருப்தி நிலவுகிறது. இவர் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பது விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.எனவே, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள, அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர் என, ஒருவர் கூட தப்பிக்காமல் இருக்க, நேர்மையான அதிகாரிகளை களமிறக்க வேண்டும். அப்போதுதான், உண்மை நிலவரம் மற்றும் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE