பொது செய்தி

தமிழ்நாடு

இலவச 'நாப்கின்' திட்டம் நகரங்களுக்கு விரிவாக்கம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
சென்னை:கிராமப்புற வளர் இளம் பெண்களுக்காக செயல்படுத்தப்படும், இலவச, 'நாப்கின்' திட்டத்தை, நகரங்களுக்கும் விரிவுபடுத்த, 44.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில், வளர் இளம் பெண்கள் இடையே, மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மாதவிடாய் கால சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன் கீழ், கிராமப் பகுதிகளில் வசிக்கும், 10 முதல், 19 வயது

சென்னை:கிராமப்புற வளர் இளம் பெண்களுக்காக செயல்படுத்தப்படும், இலவச, 'நாப்கின்' திட்டத்தை, நகரங்களுக்கும் விரிவுபடுத்த, 44.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில், வளர் இளம் பெண்கள் இடையே, மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மாதவிடாய் கால சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன் கீழ், கிராமப் பகுதிகளில் வசிக்கும், 10 முதல், 19 வயது வரையுள்ள, பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லாத பெண்கள் ஒவ்வொருவருக்கும், இலவசமாக, ஆறு, 'சானிடரி நாப்கின்' அடங்கிய மூன்று பைகள், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீதம், ஆண்டுக்கு, 18 பைகள் வழங்கப்படுகின்றன.

'இந்த திட்டம், 27.47 கோடி ரூபாய் செலவில், நகர்புறத்தில் படிக்கும் பள்ளி மாணவியருக்கும் விரிவுபடுத்தப்படும். அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும், 'சானிடரி நாப்கின்' வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி., அறிவித்தார். அதன்படி, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான கருத்துருவை, சுகாதாரத் துறை இயக்குனர், அரசுக்கு அனுப்பினார்.

பள்ளிகளில், 10 - 19 வயது பெண்களுக்கு, சானிடரி நாப்கின் வழங்க, 34.74 கோடி ரூபாய்; அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க, 9.41 கோடி ரூபாய் என, மொத்தம், 44.15 கோடி ரூபாய் செலவாகும் என, கருத்துருவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதை பரிசீலனை செய்த அரசு, 44.15 கோடி ரூபாய் ஒதுக்கி, திட்டத்தை செயல்படுத்த, அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X