சென்னை: நான்கு மாவட்டங்களில், இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவிப்பு:குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளி மண்டல சுழற்சியால், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். நாகை, மயிலாடுதுறை, கடலுார், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும், இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களிலும், பல இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 30; குறைந்தபட்சம், 24 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். மழை அளவுநேற்று காலை நிலவரப்படி, தொண்டியில், 10 செ.மீ., மழை பதிவானது. குடவாசல், 6; நாகை, மன்னார்குடி, வேதாரண்யம், திருவாடானை, கடலுார், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், அதிராம்பட்டினம், 5 செ.மீ., மழை பதிவானது.மதுக்கூர், மண்டபம், தலைஞாயிறு, பாபநாசம், திருப்பூண்டி, 4; முத்துப்பேட்டை, பேராவூரணி, மணிமுத்தாறு, நன்னிலம், சேரன்மகாதேவி, பரமக்குடி, பாம்பன், வலங்கைமான், ஒரத்தநாடு, பண்ருட்டி, விளாத்திகுளம், எட்டையபுரம், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE