பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: விவசாயிகளே பலி கடா ஆகாதீர்!

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (95)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் எதற்காக போராடுகின்றனர் என்பதே, தெளிவில்லாமல் இருக்கிறது. விவசாயி வருமானத்தை பெருக்குவதற்காக, மத்திய அரசு புதிதாக, மூன்று
ithu ungal idam, இது உங்கள் இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் எதற்காக போராடுகின்றனர் என்பதே, தெளிவில்லாமல் இருக்கிறது. விவசாயி வருமானத்தை பெருக்குவதற்காக, மத்திய அரசு புதிதாக, மூன்று வேளாண் சட்டங்களை ஏற்படுத்தி உள்ளது.

பழைய முறையில், விவசாயி உற்பத்தி செய்யும் அத்தியாவசிய உணவுப் பொருளுக்கு, அரசு விலை நிர்ணயம் செய்யும். விவசாயிகளிடம் இருந்து, விளைபொருளை கொள்முதல் செய்யும். புதிய சட்டத்தின்படி, விவசாயி, தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியும். மேலும் விளைபொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.

பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். தனியார் நிறுவனத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில், நல்ல விலையிலும் விற்கலாம். தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தாலும், விவசாயிக்கு தான் நிலம் சொந்தமாக இருக்கும் என்பதற்கும், சட்ட பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை வழங்கும் புரட்சிகரமான திட்டம் ஆகும். இதனால், விவசாயிகளின் பொருளாதாரம் உயரும். இதை புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்தும், அரசியல் காரணத்திற்காகவோ, இச்சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது, விவசாயிகள் தன் தலையில், தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம்.


latest tamil news


இந்த வேளாண் சட்டம், விவசாயிகளை பாதிக்கும் என்றால், நாடு முழுதும் போராட்டம் நடந்திருக்கும். இது, அரசியலுக்காக துாண்டி விடப்படும் போராட்டமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் அரசியல் வெறுப்புணர்ச்சிக்கு, விவசாயிகள் பலிகடா ஆகாமல், போராட்டத்தை கைவிட வேண்டும். தங்கள் முன்னேற்றத்திற்கு கிடைத்திருக்கும், சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள், பொருளாதார ரீதியில் முன்னேறும்போது தான், நாடும் சிறப்பான முன்னேற்றம் காணும். அதற்கு வழி செய்யும், புதிய வேளாண் சட்டங்களுக்கு, விவசாயிகள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-டிச-202023:36:56 IST Report Abuse
தமிழ்,கோவை ஐயா புரிஞ்சு தான் பேசுறீங்களா ? இப்ப விளையுற எல்லா காய்கறியும் என்னமோ அரசு தான் விலை நிர்ணயம் பண்ற மாதிரி பேசுறீங்க எத்தனை வகைக்கு நிர்ணயம் பண்ணுது இதுல எத்தனை விவசாயி மண்டிக்கு போறாங்கன்னு தெரியுமா ? இந்த புது சட்டம் விவசாயி விலை நிர்ணயம் பண்ணலாம்ன்னு சொல்லுது சரி அந்த விலைக்கு யார் வாங்குவான்னு சொல்லலையே அடுத்து எங்க வேனாலும் கொண்டு போய் வித்திடுங்கனு சொல்லுது நாளைக்கு ஒருவாட்டி தக்காளியை பறிப்போமா இல்ல நாலு கூடை தக்காளியை கொண்டுட்டு கோவைல இருந்து மெட்ராஸ் போவமா நல்ல விலை வேணும்னு இதுல வெளிநாடாம் எக்ஸ்போர்ட்டாம் ...ஒப்பந்த விவசாயம் பண்ணி பீகார் விவசாயிங்க பெப்சிகோ நிறுவனத்திடம் படும் பாடு உங்களுக்கு தெரியாம இருக்கலாம் ஆனா எங்களுக்கு தெரியும் ஏன்னா நாங்களும் மண்ணை நம்பி பிழைக்குற வர்க்கம்
Rate this:
Cancel
vsraj - COIMBATORE,இந்தியா
17-டிச-202022:57:47 IST Report Abuse
vsraj சட்டத்தில் என்ன குறை ? எந்த அம்சத்தை எதிர்த்து இந்த போராட்டம்? ஒன்றும் தெளிவாக தெரியவில்லையே. சொல்லக்கூடிய விஷயமாக இல்லை போலும். எங்கோ இடிக்கிறதே.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
17-டிச-202021:43:05 IST Report Abuse
Visu Iyer கண்களை விற்று சித்திரம் வாங்கலாமா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X