சென்னை: ‛டிவி' நடிகை சித்ரா ஹேமநாத் தந்தையிடம் பேசிய ஆடியோ மூலம் அவரது கணவர் ஹேமநாத்தை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகை சித்ராவின், மொபைல் போனில் பதிவாகியிருந்த, 'ஆடியோ' பதிவு அழிக்கப்பட்ட தகவல், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, 'டிவி' நடிகை சித்ரா, பூந்தமல்லி அருகே, நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கெண்டார். உடன் தங்கி இருந்த, சந்தேக பேர்வழியான, அவரது கணவர் ஹேம்நாத், 32 என்பவரை, நசரத்பேட்டை போலீசார் கைது செய்து, பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.சித்ராவின் தற்கொலை குறித்து, ஹேம்நாத்தின் பெற்றோரிடம், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார். சிறையில் இருக்கும், ஹேம்நாத்திடம், இன்று விசாரிக்க உள்ளார்.
இந்நிலையில், சித்ராவின் தற்கொலை வழக்கில், புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.இது குறித்து, போலீசார் கூறியதாவது: சந்தேகத்தால், தினமும் கேவலமான சொற்களால் தன் மனதை காயப்படுத்தி வந்த ஹேம்நாத்தின் நடவடிக்கை குறித்து, அவரது தந்தையிடம் சித்ரா கூறிஉள்ளார்.அவர் தற்கொலை செய்த பின், சித்ராவின் மொபைல் போனில் இருந்த தகவல்களை, ஹேம்நாத் அழித்துள்ளார். ஆனால், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என, ஹேம்நாத் சாதித்து வந்ததால், அவர் மீது சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், சித்ராவின் மொபைல் போனில் இருந்த, ஆடியோ பதிவுகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட விபரங்கள் திரும்ப பெறப்பட்டன. அதில், ஹேம்நாத்தின் தந்தையுடன், சித்ரா பேசிய ஆடியோ பதிவு கிடைத்தது. இதுபற்றி கேட்டபோது தான், ஹேம்நாத் வசமாக சிக்கினார். அதன் பிறகே, தற்கொலைக்கு துாண்டியதாக அவர் கைது செய்யப்பட்டார். ஹேம்நாத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து, ஊர் சுற்றி வந்தார்; பின், பிரிந்து விட்டார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE