பொது செய்தி

இந்தியா

பஜ்ரங் தள பக்கத்தை தடை செய்ய வேண்டியதில்லை: பேஸ்புக் தலைமை விளக்கம்

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: பாராளுமன்ற நிலைக்குழு முன் ஆஜரான பேஸ்புக் இந்தியா தலைவர் அஜித் மோகன், தங்கள் நிறுவனம் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை என கூறினார்.அமெரிக்காவிலிருந்து வெளியாகிறது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை. அதில் பேஸ்புக் இந்தியா நிறுவனம் வணிக நோக்கங்களுக்கு பா.ஜ.க., மற்றும் வலதுசாரி அமைப்புகளின் சர்ச்சை பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என
Bajrang Dal, Facebook, Facebook India, fb

புதுடில்லி: பாராளுமன்ற நிலைக்குழு முன் ஆஜரான பேஸ்புக் இந்தியா தலைவர் அஜித் மோகன், தங்கள் நிறுவனம் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை என கூறினார்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகிறது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை. அதில் பேஸ்புக் இந்தியா நிறுவனம் வணிக நோக்கங்களுக்கு பா.ஜ.க., மற்றும் வலதுசாரி அமைப்புகளின் சர்ச்சை பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்டிருந்தது. இப்பிரச்னையை காங்., எம்.பி., ராகுல் கையில் எடுத்தார். அதனைத் தொடர்ந்து சில மாதங்களில் பேஸ்புக் கொள்கை அதிகாரி அங்கி தாஸ் ராஜினாமா செய்தார்.

பாராளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவரான சசி தரூர் இவ்விவகாரம் குறித்து விசாரிக்க முடிவு செய்தார். இக்குழுவின் உறுப்பினர்களாக கார்த்தி சிதம்பரம் மற்றும் பா.ஜ.க., எம்.பி., நிஷிகந்த் துபே ஆகியோர் உள்ளனர். புதனன்று இக்குழுவின் முன் பேஸ்புக் இந்தியா தலைவர் அஜித் மோகன் ஆஜரானார். நிதி காரணங்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பஜ்ரங் தளத்தின் பேஸ்புக் பக்கம் முடக்கப்படவில்லையா என கேட்கப்பட்டது.


latest tamil news



கேள்விகளுக்கு பதிலளித்த அஜித் மோகன், “பேஸ்புக் உண்மை குழுவின் ஆலோசகர் இதுவரை பஜ்ரங் தளம் வெளியிட்டுள்ள பதிவுகளில் எங்களின் சமூக ஊடகக் கொள்கைகளை மீறும் எந்தவொரு கூறுகளையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே அதை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.” என கூறியுள்ளார். “அப்படி என்றால் ஏன் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை, அதனை போலிச் செய்தி என ஏன் குறிப்பிடவில்லை” என்று பா.ஜ.க., எம்.பி., நிஷிகந்த் கேட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri - Chennai,இந்தியா
17-டிச-202012:01:29 IST Report Abuse
Vetri என்ன இவனே ஒரு பயங்கர தள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X