பொது செய்தி

இந்தியா

ரூ.10,500 கோடி திட்டத்தை டி.ஆர்.டி.ஓ.,வுக்கு தருகிறது பாதுகாப்பு அமைச்சகம்

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிக்க ஏர் இந்தியாவின் 6 விமானங்களை, வான்வழி ரேடார் நிலையமாக மாற்ற டி.ஆர்.டி.ஓ.,வுக்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்க உள்ளது.இந்தியா - சீனா உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. மேலும் பாகிஸ்தானுடன் சீனா மிகவும் நெருக்கம் காட்டி வருகிறது. இதனால் எல்லையில் தீவிர கண்காணிப்பு அவசியமாகிறது. அதற்காக
DRDO, IAF, Air India, Pakistan, India

புதுடில்லி: சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிக்க ஏர் இந்தியாவின் 6 விமானங்களை, வான்வழி ரேடார் நிலையமாக மாற்ற டி.ஆர்.டி.ஓ.,வுக்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்க உள்ளது.

இந்தியா - சீனா உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. மேலும் பாகிஸ்தானுடன் சீனா மிகவும் நெருக்கம் காட்டி வருகிறது. இதனால் எல்லையில் தீவிர கண்காணிப்பு அவசியமாகிறது. அதற்காக விமானப்படையின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு விமானத்திலிருந்தபடியே கண்காணிப்பு மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடிய அதிநவீன ரேடார் அமைப்பு கொண்ட விமானங்கள் தேவை.


latest tamil news


அந்த ரேடாருக்கு வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு என்று பெயர். ஐரோப்பிய நிறுவனத்திடம் இந்த ரேடார் அமைப்பு பொருத்திய 6 ஏர்பஸ் 330 விமானங்களை பாதுகாப்பு அமைச்சகம் வாங்க இருந்தது. இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இந்நிலையில் ஏர் இந்தியாவின் விமானங்களை டி.ஆர்.டி.ஓ., மூலம் மாற்றி அமைத்து நவீன ரேடார்களை பொருத்த முடிவு செய்துள்ளனர். மேக் இன் இந்தியா மற்றும் தன்னிறைவு திட்டத்தை விளம்பரப்படுத்த இது உதவும்.

இத்திட்டத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்க உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பே டி.ஆர்.டி.ஓ., நேத்ரா என்ற பெயரில் இந்த ரேடார் அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. தற்போது இப்புதிய திட்டத்தால் உள்நாட்டு பாதுகாப்புத் தொழிலுக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும் என்கின்றனர். தற்போது உருவாக்க உள்ள ஏஇடபிள்யூ&சி தொகுதி இரண்டு விமானங்கள் நேத்ரா விமானத்தை விட அதிக திறன் கொண்டவை. போர்களின் போது எதிரியின் எல்லைக்குள் 360 டிகிரியிலும் நமது விமானங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
17-டிச-202010:22:14 IST Report Abuse
Appan 10,500 கோடி... என்பது சுமார் 1.5 Bill Doller ..அது ஒன்னும் பெரிய தொகை இல்லை..இந்திய ராணுவத்தளவாடங்களை இந்தியாவில் செய்ய வேண்டும்..அதை விட்டு இறக்குமதி செய்வது நாட்டை பாதுகாப்பு இல்லாமல் செய்து விடும்..இது நாள் வரை ராணுவ தளவாடங்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்ய பட்டது..பல காரணங்கள் இருந்தாலும் லஞ்சம் இவைகளில் இருந்தது.. அதாவது கமிஷனுக்காகவே ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய பட்டது..ஒரு நாட்டை இப்படி ஆட்சி செய்யலாமா? இஸ்லாமியர்கள் எப்படி இந்தியாவை ஆக்கிரமித்தார்கள்? போரில் வென்று நாட்டை பிடித்தார்கள்.. இதற்க்கு அவர்களிடம் இருந்த பீரங்கி தொழில் நுட்பம் உதவியது.. அப்போ இந்தியர்களிடம் இந்த தொழில் நுட்பம் இல்லை.. இது எதை சொல்கிறது? போரில் புதிய தொழில் நுட்பம் உள்ளவர்களே வெல்வார்கள். சும்மா 12 லட்சம் பேர் ராணுவத்தில் இருந்தால் மட்டும் நாட்டை காப்பாற்ற முடியாது..இவ்வளவு பெரிய மக்கள் தொகை உள்ள நாட்டில் அறிவியலுக்கா பஞ்சம்? இந்திய பெரிய அளவில் முதலீட்டு செய்து புதிய ராணுவ தளவாடங்களை உற்பத்தி பண்ணனும்..புதிய ராணுவ தொழில் நுட்பமே ஒரு நாட்டை காப்பாற்றும்..
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
17-டிச-202009:59:39 IST Report Abuse
கொக்கி குமாரு ஒரு பேச்சுக்கு, திருட்டு திமுகவின் யாராவது ராணுவ மந்திரி பதவிகளில் இருந்தால் என்ன நடந்திருக்கும்? 10500 கோடிகளில் 10000 கோடிகளை ஆட்டையை போட்டுவிட்டு மீதம் இருக்கும் 500 கோடிகளை டி.ஆர்.டி.ஓ.,வுக்கு கொடுத்திருப்பார்கள்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-டிச-202008:42:53 IST Report Abuse
RajanRajan ஏவுகணைகள் ராடார் சகிதம் பன்முனை தாக்குதல் நடத்த வல்ல தொழில்நுட்ப கட்டமைப்பை இந்த ஏர் பஸ் விமானத்தில் உள்ளடக்க வேண்டும். DRDO வின் ஆராய்ச்சி திறனும் இதனால் பன்மடங்கு அதிகரிக்கும். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். வந்தே மாதரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X