பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் உதவி மக்களின் உரிமை; மாவட்ட நீதிபதி பேச்சு

Added : டிச 17, 2020
Share
Advertisement
வடமதுரை : 'அரசிடம் உதவி பெறுவது என்பது பிச்சை இல்லை; அது மக்களின் உரிமை' என, முதன்மை மாவட்ட நீதிபதி ஜமுனா பேசினார்.திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஹோப் நிறுவனம் சார்பில் அமைப்பு சாரா, கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்யும் விழா அய்யலுாரில் நடந்தது. ஹோப் இயக்குனர் பழனிச்சாமி வரவேற்றார். சார்பு நீதிபதிகள் பாரதிராஜா, செல்வநாயகி, மாவட்ட

வடமதுரை : 'அரசிடம் உதவி பெறுவது என்பது பிச்சை இல்லை; அது மக்களின் உரிமை' என, முதன்மை மாவட்ட நீதிபதி ஜமுனா பேசினார்.

திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஹோப் நிறுவனம் சார்பில் அமைப்பு சாரா, கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்யும் விழா அய்யலுாரில் நடந்தது. ஹோப் இயக்குனர் பழனிச்சாமி வரவேற்றார். சார்பு நீதிபதிகள் பாரதிராஜா, செல்வநாயகி, மாவட்ட உரிமையியல் நீதிபதி முருகானந்தி பங்கேற்றனர்

மாவட்ட நீதிபதி ஜமுனா பேசியதாவது: அமைப்பு சாரா பணியாளர்களும் கவுரவமாக வாழ சட்டம் வழி செய்கிறது. இவர்களுக்கு ஓய்வூதியம் உள்பட 10 வித திட்டங்கள் மூலம் அரசின் உதவி கிடைக்கும்.அரசின் உதவிகளை பெறுவது பிச்சை இல்லை; அது மக்களின் உரிமை. வாரியத்தில் பதிவு செய்ய ஆதார், ரேஷன் கார்டு இல்லை என்போர் அந்தந்த பகுதி சட்டப்பணிகள் குழுவை அணுகினால் பெற்று தரப்படும்' என்றார். ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X